actor madurai mohan passed away

நடிகர் மதுரை மோகன் காலமானார்!

சினிமா

நடிகர் மதுரை மோகன் உடல்நலக்குறைவால் இன்று (டிசம்பர் 9) காலை காலமானார்.

ஏராளமான தமிழ் படங்களில் துணை நடிகராக நடித்து பிரபலமானவர் நடிகர் மதுரை மோகன். 40 வருடங்களாக ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் 2014 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான முண்டாசுப்பட்டி படத்தில் தான் பிரபலமானார்.

தொடர்ந்து துணை நடிகராக திரைப்படங்களில் நடித்து வந்த இவர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

இவரது மறைவிற்கு முண்டாசுப்பட்டி படத்தில் உடன் நடித்த நடிகர் காளி வெங்கட் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ஐயா நடிகர் மதுரை மோகன் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும்.

ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தவரை “முண்டாசுப்பட்டி” படத்தின்மூலம் வாய்ப்பளித்த இயக்குனர் ராம்குமாருக்கு, “வீரன்” பட இயக்குனர் ஏ.ஆர்.கே சரவணனுக்கும் மற்றும் ஐயாவுக்கு வாய்ப்பளித்த அனைத்து இயக்குனர்களையும் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

திரைத்துறையினர் பலரும் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

போலி சுங்கச்சாவடி அமைத்து ரூ.75 கோடி வசூல்… 5 பேர் மீது பாய்ந்தது வழக்கு!

அதிரடியாக குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *