குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. வாரா வாரம் ஆரவாரம் என்ற அடிப்படையில் வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுத்து அசத்துவது தான் இந்த நிகழ்ச்சியின் அடித்தளம்.
இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு இருந்தனர். குக் வித் கோமாளி சீசன் 5 கடந்த ஜனவரி மாதமே ஆரம்பித்திருக்க வேண்டும்.
இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்த ‘மீடியா மேசன்ஸ்’ என்ற நிறுவனம் அதிலிருந்து விலகியது தான் தாமதத்திற்குக் காரணம்.
இதற்கு பின்னர் வெங்கடேஷ் பட்டும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இதையடுத்து விஜய் டிவி அவருக்கு பதிலாக புகழ் பெற்ற சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக செஃப் வெங்கடேஷ் பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘சிங்கம் சிங்கிளா தான் வரும்’ என்பது போல் பதிவிட்டு புதிய நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
இந்த பதிவிற்கு கீழ் குக் வித் கோமாளி பிரபலம் குரேஷி ‘சரியாக சொன்னீர்கள் சார்’ என்று பதில் அளிக்க அது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.
இதைப்பார்த்த ரசிகர்கள் விஜய் டிவியில் இருந்து கொண்டே வெங்கடேஷ் பட்டுக்கு ஆதரவாக இவர் பதிவிட்டது ஏன்? ஒருவேளை குரேஷியும் விஜய் டிவியில் இருந்து வெளியேறப் போகிறாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் குரேஷி அளித்துள்ள பேட்டியில், ” பட் சார் போட்ட பதிவிற்கு நான் இயல்பாகத் தான் கமெண்ட் செய்தேன்.
அதை வச்சு எப்படி எல்லாம் பேசுறாங்க. பட் சாரின் புதிய முயற்சிக்கு நான் வாழ்த்து தெரிவித்தது தப்பா?அவருடன் எனக்கு நல்ல பழக்கம் இருக்கிறது.
யார் எப்படி சொன்னாலும் நான் விஜய் டிவியில் தான் இருப்பேன்”, என்று சர்ச்சைகளுக்கு முடிவு கட்டியுள்ளார்
குக் வித் கோமாளி சீசன் 5-க்கான போட்டியாளர்களை வைத்து, விஜய் டிவி தற்போது ப்ரோமோ வீடியோக்களை ஷூட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: உடற்பயிற்சியின்போது வலி ஏற்படுவது ஏன்?
உதயசூரியன் நாடு: மறக்க முடியாத இரவு!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
சண்டே ஸ்பெஷல்: டூர் செல்கிறீர்களா… உணவு விஷயத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதோ!