நடிகர் கவின் நடிப்பில் இயக்குநர் இளன் இயக்கத்தில் கடந்த மே 10 ஆம் தேதி வெளியான ஸ்டார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் பட்டியலில் இணைந்துள்ளது.
“ஸ்டார்” படத்தை தொடர்ந்து அடுத்ததாக “Bloody Beggar” என்ற திரைப்படத்தில் நடிகர் கவின் நடிக்கிறார்.
இந்த படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சிவபாலன் இயக்க, நெல்சன் அவர்களே இந்த படத்தை தயாரிக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் புரோமோ மற்றும் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த படம் மட்டுமின்றி டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் “கிஸ்” என்ற திரைப்படத்தில் நடிகர் கவின் நடித்திருக்கிறார்.
மேலும் இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விக்கர்ணன் அசோக் இயக்கத்தில் நடிகர் கவின் “மாஸ்க்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் நிறுவனம் வழங்குகிறது. இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்நிலையில் தற்போது நடிகர் கவின் நடிப்பில் உருவாகி வரும் Bloody Beggar மற்றும் கிஸ் ஆகிய திரைப்படங்களின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Blood Beggar திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்றும், கிஸ் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளிக்கு நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள “கங்குவா” திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில், அந்த படத்திற்கு போட்டியாக தீபாவளி ரேசில் கவின் நடித்துள்ள “கிஸ்” திரைப்படம் இணைகிறதாம்.
மேலும் வெற்றிமாறனின் உதவி இயக்குநர் விக்கர்ணன் அசோக் இயக்கத்தில் கவின் நடிக்கும் “மாஸ்க்” திரைப்படம் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வைரமுத்து பாடலில் பிழை… விழா மேடையில் போட்டுடைத்த விக்கிரமராஜா
‘நீட்டை ஒழிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை’ – ஸ்டாலின்