‘நட்புனா என்னான்னு தெரியுமா’, ‘லிஃப்ட்’, ‘டாடா’ ஆகிய படங்களுக்குப் பிறகு கவின் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஸ்டார்’.
இது கவினின் 4-வது படமாகும். ‘பியார் பிரேமா காதல்’ இளன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில் சுந்தர்.சி இயக்கத்தில் கவின் நடிக்கவிருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ‘கலகலப்பு’ படத்தின் 3-வது பாகத்தில் கவின் நாயகனாக நடிக்கிறாராம்.
கடந்த 2௦12-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘கலகலப்பு’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து 6 வருடங்களுக்கு பிறகு, இந்த படத்தின் 2-வது பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும், வசூலையும் அள்ளியது.
தற்போது மீண்டும் 6 ஆண்டுகளுக்கு பிறகு ‘கலகலப்பு’ படத்தின் 3-வது பாகத்தினை தயாரித்து, இயக்கிட சுந்தர்.சி முடிவு செய்துள்ளாராம்.
இதில் கவினுடன் இணைந்து நடிக்கும் இன்னொரு நடிகர் மற்றும் நடிக, நடிகையர், தொழில்நுட்பக் குழுவினர் குறித்த விவரங்களை விரைவில் சுந்தர்.சி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கவின் நடிப்பில் உருவாகும் அவரின் 5-வது படத்திற்கு ‘கிஸ்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தினை சதீஷ் இயக்க அனிருத் இசையமைக்கிறார். 6-வது படத்தினை நெல்சனின் உதவி இயக்குநர் சிவபாலன் இயக்க, நெல்சன் தயாரிக்கிறார்.
7-வது படத்தினை வெற்றிமாறனின் உதவி இயக்குநர் விக்ரனன் அசோகன் இயக்க, வெற்றிமாறனே தன்னுடைய கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். அவரின் 8-வது படமாக சுந்தர்.சி இயக்கத்தில் ‘கலகலப்பு’ 3-வது பாகம் உருவாகிறது.
இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தன்னுடைய 9-வது படத்தில் நடிக்கிறார். தொடர்ந்து கவினின் 1௦-வது படத்தினையும் முன்னணி இயக்குநர் ஒருவர் இயக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்கள் படங்களில் இணைந்துள்ளதால், இளம் ஹீரோவில் இருந்து அடுத்த கட்டத்திற்கு கவின் அடியெடுத்து வைத்துள்ளார்.
மேற்கண்ட படங்கள் ஹிட்டடிக்கும் பட்சத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக, கவின் உயருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செந்தில்பாலாஜி நீதிமன்ற காவல் 22வது முறையாக நீட்டிப்பு!
மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் : முழு விபரம்!