kavin arun vijay arulnithi

அருண் விஜய், அருள்நிதியுடன் மோதும் கவின்?

சினிமா

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக பெரிய படங்களின் ரிலீஸ் மே மாதம் வரை இருக்காது என கூறப்படுகிறது. இதனால் தான் ரசிகர்களின் கவனம் ரீ-ரிலீஸ் படங்களின் பக்கம் திரும்பியுள்ளது.

இதற்கிடையில் அருண் விஜய், அருள்நிதி ஆகியோரின் படங்களுடன் கவினின் ‘ஸ்டார்’ படமும் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

kavin arun vijay arulnithi

வணங்கான் kavin arun vijay arulnithi

‘மிஷன் சேப்டர் 1’ படத்தின் வெற்றிக்கு பிறகு பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் படம் ‘வணங்கான்’. சூர்யா நடிப்பதாக இருந்த இப்படத்தில் தற்போது அருண் விஜய் நடித்து வருகிறார்.

இதில் அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷும், முக்கிய வேடங்களில் மிஷ்கின், சமுத்திரக்கனியும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

kavin arun vijay arulnithi

டிமாண்டி காலனி 2

கடந்த 2015-ம் ஆண்டு அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தாமல் வெளியாகி அருள்நிதிக்கு மிகப்பெரிய வெளிச்சத்தைக் கொடுத்த படம் ‘டிமாண்டி காலனி’. காமெடியும், ஹாரரும் கலந்து வெளியான ‘டிமாண்டி காலனி’ வசூலிலும் சாதனை புரிந்தது.

இந்த நிலையில் அதன் இரண்டாவது பாகமான ‘டிமாண்டி காலனி 2’ தற்போது உருவாகியுள்ளது. இதில் அருள்நிதியுடன் இணைந்து பிரியா பவானி ஷங்கர், மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவே இந்த பாகத்தையும் இயக்கியுள்ளார்.

kavin arun vijay arulnithi

ஸ்டார்

‘பியார் பிரேமா காதல்’ இயக்குநர் இளன் தற்போது கவின் நடிப்பில் ‘ஸ்டார்’ படத்தை இயக்கி வருகிறார். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அதிதி எஸ்.போஹன்கர் நடித்து வருகிறார்.

இப்படத்தின் புகைப்படங்கள் மற்றும் கிளிம்ஸ் வீடியோ ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ‘டாடா’ படத்தின் வெற்றியால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

தமிழ் புத்தாண்டு kavin arun vijay arulnithi

இந்த நிலையில் ‘வணங்கான்’, ‘டிமாண்டி காலனி 2’, ‘ஸ்டார்’ ஆகிய மூன்று படங்களும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் 12-ம் தேதி வெளியாகவிருப்பதாக கூறப்படுகிறது.

அப்படி ஒரே நாளில் மேற்கண்ட படங்கள் திரைக்கு வந்தால் அருண் விஜய், அருள்நிதி ஆகியோருடன் கவினும் நேரடியாக மோதும் சூழ்நிலை ஏற்படலாம்.

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோடி முன்னிலையில் அண்ணாமலை வேண்டுகோள்!

காளிதாஸ் ஜெயராமுடன் சேர்ந்து நடிப்பதற்கு யோசிக்க வேண்டும் : அர்ஜுன் தாஸ்

+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *