டாணாக்காரன் தமிழ் இயக்கத்தில் உருவாகும் கார்த்தி 29!
தமிழ் திரையுலகில் சகுனி, ஜோக்கர், காஷ்மோரா, அருவி, என்.ஜி.கே., கைதி, ஜப்பான் போன்ற குறிப்பிடத்தக்க திரைப்படங்களை தயாரித்துள்ள டிரீம் வாரியர் திரைப்பட நிறுவனம் கார்த்தி நடிக்கும் 29வது படத்தை தயாரிக்கவுள்ளது. இந்தப்படத்தின் மூலம் நான்காவது முறையாக கார்த்தி நடிக்கும் படத்தை இந்நிறுவனம் தயாரிக்கிறது.
விக்ரம் பிரபு, லால், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடிப்பில் 2022 ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான படம் டாணாக்காரன். அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கிய இந்த திரைப்படம் காவலர் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டது.
தமிழ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் 29வது படத்தை தயாரிக்க இருப்பதாக டிரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.
இந்தப் படம் குறித்த அறிவிப்பில் கார்த்தி 29 என குறிப்பிடப்பட்டு கப்பல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதோடு நிறைய ஆச்சர்யங்கள் காத்திருக்கிறது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தப் படத்தின் கதைக்களம் கடல் சார்ந்த பகுதியில், வரலாற்று பின்னணியில் இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது. தற்போது சர்தார் – 2 படத்தில் நடித்து வரும் அவர் அந்தப்படத்தை முடித்து விட்டு கார்த்தி 29 படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: அடிக்கடி எதுக்களிக்கும் பிரச்சினையைச் சந்திப்பவரா நீங்கள்? ஆபத்தில் முடியலாம்!
பியூட்டி டிப்ஸ்: ‘ஐஸ் பாத்’ சிகிச்சை… ஆரோக்கியமானதா?
அரசியல் தத்துவத்தில் புதுப்பாதை சமைத்த அறிஞர் அண்ணா
டாப் 10 நியூஸ் : ஸ்டாலினை சந்திக்கும் திருமாவளவன் முதல் மூக்குத்தி அம்மன் 2 பட அப்டேட் வரை!