விருமன் படம் பார்த்த விஜய் மனைவி!

சினிமா

நடிகர் கார்த்தி மற்றும் அதிதி நடிப்பில் விருமன் படம் இன்று (ஆகஸ்ட் 12) திரையரங்குகளில் வெளியானது.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ஆர்.கே. சுரேஷ் ரோபோசங்கர், பிரகாஷ் ராஜ், வடிவுக்கரசி ஆகியோர் விருமன் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தாயாரித்துள்ளது.

இயக்குனர் முத்தையா எப்போதும் கிராமிய பின்னணி கதைகளை இயக்குவதில் பிரபலமானவர். கொம்பன் படத்திற்கு பிறகு முத்தையா மற்றும் கார்த்தி இணைந்து பணியாற்றும் படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகளவு இருந்து வந்தது. மேலும் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இன்று (ஆகஸ்ட் 12) திரையரங்குகளில் படம் வெளியாகியுள்ளது.

திரையரங்குகளில் விருமன் வெளியானதை தொடர்ந்து நடிகர் கார்த்தி “விருமனை உங்கள் வீடுகளில் அனைவரும் விரும்புவார்கள் என்று நம்புகிறேன்” என்று ட்விட் செய்துள்ளார்.

ஏராளமான திரையரங்குகளில் ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியைக் கொண்டாடி வருகின்றனர். படத்தை பார்த்த ரசிகர்கள் படம் சிறப்பாக உள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். படத்தின் கதை, கார்த்தியின் நடிப்பு, பாடல் என அனைத்தையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். பல திரையரங்குகளில் ரசிகர்கள் விருமன் பட கட்டவுட்டிற்கு மாலை அணிவித்து தாரை தப்பட்டைகளுடன் கொண்டாடினர்.

இயக்குனர் சங்கர் மகள் அதிதி விருமன் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகி உள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் அனைவரும் முதல் காட்சியை பார்ப்பதற்கு திரையரங்கிற்கு சென்றுள்ளனர். அவர்களோடு சேர்ந்து நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவும் படம் பார்க்க சென்றுள்ளார். கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து நடிகர் கார்த்தி திரைப்படத்தின் முதல் காட்சியை பார்த்து ரசித்தார்.

இந்நிலையில், முன்னணி நடிகர்களின் படம் என்றாலே காலை 4 மணி காட்சி திரையிடப்படும். ஆனால் கார்த்தியின் விருமன் 4 மணி காட்சி வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர், முதல் காட்சி காலை 7 மணிக்கு மேல் தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது.

மோனிஷா

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.