இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஜப்பான். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு ஜப்பான் படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, எஸ்.ரவி வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். அணு இமானுவேல், சுனில், கே.எஸ்.ரவிக்குமார் ஆகிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன் வெளியான ஜப்பான் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் கார்த்திக் ஜப்பான் படத்தில் மிகப்பெரிய கொள்ளைக்காரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்காக வழக்கமான உடல் மொழி, குரல் என அனைத்தையும் மாற்றி ஜப்பான் கேரக்டராகவே உருமாறியிருக்கிறார்.
ஜப்பான் படம் நடிகர் கார்த்தியின் 25வது படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. வரும் தீபாவளிக்கு இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜப்பான் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
வரும் நவம்பர் 10 ஆம் தேதி கார்த்தியின் ஜப்பான் படம் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் நவம்பர் 10 தேதி தான் வெளியாக உள்ளதாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
ஆளுநர் மாளிகையில் குண்டு வீச்சு: ரவுடி கொடுத்த வாக்குமூலம்!
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு: ரவுடி கைது!