கார்த்தியின் முகநூலில் கேம் விளையாடிய ஹேக்கர்கள்!

சினிமா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கார்த்தியின் முகநூல் பக்கம் இன்று (நவம்பர்14)முடக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கார்த்தி, 2007-ஆம் ஆண்டு வெளியான பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானார்.

கார்த்தி தனது முதல் படத்திலேயே மதுரை வட்டார வழக்கில் பேசி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்தார். தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, மெட்ராஸ், தோழா உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகரானார்.

actor karthi facebook account hacked fans shocked

சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி நடித்து வருகிறார்.

இந்தநிலையில், இன்று(நவம்பர் 14) நடிகர் கார்த்தியின் முகநூல் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னுடைய முகநூல் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. முகநூல் குழுவுடன் அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

அவரது முகநூல் பக்கத்தில் 3 மணி நேரம் 30 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ கேம் பதிவிடப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பதிவில் கார்த்தி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கார்த்தியின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

முன்னதாக கடந்த மாதம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை!

பொருளாதார நலிவுற்றோர் இட ஒதுக்கீடு என்னும் சமூக அநீதி

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0