தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் உருவாகியுள்ள மெய்யழகன், வா வாத்தியார் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.
இதனையடுத்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார். சினிமாவில் பிஸியாக நடித்து வரும் கார்த்தி, இன்று மதுரை மாவட்ட கார்த்தி ரசிகர் மன்ற தலைவர் இல்ல காதணி விழாவில் கலந்து கொண்டார்.
மதுரை செல்லூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில், மதுரை மாவட்ட கார்த்தி ரசிகர்கள் மட்டுமல்லாது அருகிலுள்ள விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் ரசிகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு வந்த கார்த்தியை காண ரசிகர்கள் முண்டியடித்தனர். ரசிகர்களின் கடும் கூட்ட நெரிசலுக்கு மத்தியில் விழா மேடைக்கு சென்ற கார்த்தி, காதணி விழா கொண்டாடிய குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்து முத்தம் கொடுத்தார்.
பின்னர் மைக்கில் பேசிய கார்த்தி, “என்ன மாமா செளக்கியமா?” என்று பருத்திவீரன் பட வசனத்தை பேசினார். இதனால் அங்கிருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.
தொடர்ந்து தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு கார்த்தி அங்கிருந்து கிளம்பினார். கார்த்தி மதுரைக்கு வருகை தந்ததால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…