திமுக தலைவர் மறைந்த கலைஞருடனான தனது நட்பையும், தொடர்பையும் நினைவு கூறும் வகையில் நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் முகம் தெரியாதபடி புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அது, இந்தியன் – 2 கெட்டப்புடன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை எதிரில் நின்று எடுத்த புகைப்படமாகும்.
விக்ரம் படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படப்பிடிப்பில் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.
கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது.
https://twitter.com/ikamalhaasan/status/1603364936813461505/photo/2
அப்போது, மெரினா கடற்கரையில் உள்ள நேதாஜி சிலை முன்பாக இந்தியன் தாத்தா கெட்டப்பில் நின்றபடி, கமல் தான் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் “25 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞரால் மாவீரர் நேதாஜிக்கு சிலை திறக்கப்பட்ட அதே நாளில் அந்தச் சிலையின் கீழே இந்தியன்-2 படப்பிடிப்பிற்காக நிற்கிறேன். மகத்தான மனிதர்கள், மகத்தான நினைவுகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியன் படத்தில் அவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ராணுவ படையில் பணியாற்றிய வீரராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இராமானுஜம்