“இசையுலக ஏகச் சக்ராதிபதியை வாழ்த்துகிறேன்”: கமல்

சினிமா

இசைஞானி இளையராஜாவின் 80 ஆவது பிறந்தநாளையொட்டி நடிகர் கமல் ஹாசன் இன்று (ஜூன் 2) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது 80 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவருக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Actor Kamal congratulated Ilayaraja

அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “திரையிசைச் சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களைக் கடந்து நிலைத்து மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது. இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர் என் அன்புக்கும் ஆச்சரியத்துக்கும் மிக உரிய உயரிய அண்ணன் இளையராஜா.

இன்று பிறந்த நாள் காணும் இசையுலக ஏகச் சக்ராதிபதியை வாழ்த்துகிறேன்.” என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கலைஞர் நூற்றாண்டு விழா: தொடங்கி வைக்கிறார் முதல்வர்!

ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: தப்ப வழியின்றி உக்ரைனில் தாய், மகள் பலியான சோகம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *