தமிழில் விக்ரம் வேதா, புதுப்பேட்டை, பிகில், தெறி உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்தவர் ஜெயசீலன்.
விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் விஜய் குரூப்பில் இருக்கும் அடியாட்களில் ஒருவராக ஜெயசீலன் நடித்திருப்பார். புதுப்பேட்டை படத்தில் விஜய் சேதுபதியின் நண்பராக நடித்திருப்பார்.
விஜய் சேதுபதியுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். விக்ரம் வேதா படத்திலும் விஜய் சேதுபதியின் நெருங்கிய நண்பராக நடித்து ஜெயசீலன் அசத்தியிருப்பார். 40 வயதான இவர் புது வண்ணாரப்பேட்டையில் வசித்தார்.
இந்த நிலையில், நடிகர் ஜெயசீலனுக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக அவர் சிகிச்சை பெற்று வந்தார் ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று (ஜனவரி 24 ) ஜெயசீலன் உயிரிழந்தார்.
அவரின் உடல் புது வண்ணாரப்பேட்டையிலுள்ள அவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயசீலன் இறப்புக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.