‘வடிவேலு சேரில் உட்கார்ந்தால், நாங்கள் தரையில்தான் அமர வேண்டும்’- நடிகர் ஜெயமணி

Published On:

| By Kumaresan M

நடிகர் வடிவேலு சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர். மனிதர் காமெடியில் பின்னி எடுத்தாலும், சக நடிகர்களுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதாக பலரும் சொல்வது உண்டு.

நடிகர் சிங்கமுத்துவுடன் இன்னும் சர்ச்சை தீரவில்லை. இது தொடர்பாக , வடிவேலு அடிக்கடி நீதிமன்றத்தை அணுகுவது உண்டு. இந்த நிலையில், வடிவேலுவுடன் பல படங்களில் நடித்த நடிகர் ஜெயமணி வடிவேலு பற்றி சில விஷயங்களை கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, “ஷுட்டிங் செட்டில் நடிகர் வடிவேலு சேரில் அமர்ந்திருப்பார். நாங்கள் அனைவரும் தரையில்தான் அமர்ந்திருக்க வேண்டும். நடிகர் சிங்க முத்துவுக்கும் இதே நிலைதான்.

வடிவேலு ரொம்பவே ஈகோ பிடித்தவர். அவரைப் பற்றி சிங்கமுத்து மட்டும்தான் பேசிக் கொண்டிருக்கிறார். வடிவேலுவை பற்றி ஏன் பேச வேண்டுமென்றுதான் நானெல்லாம் அமைதியாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மற்றோரு காமெடி நடிகரான கொட்டாச்சியும் சமீபத்தில் வடிவேலு பற்றி குறை கூறியிருந்தார். கொட்டாச்சி கூறியிருப்பதாவது, “தயாரிப்பாளர்கள் எப்போதுமே எங்களை போன்ற நடிகர்களுக்கு மொத்தமாகத்தான் சம்பளத்தை கொடுப்பார்கள். அதனை வடிவேலுவோ, நானே அவர்களிடம் கொடுத்துக்கொள்கிறேன் என்று கூறி வாங்கிக் கொள்வார்.

அதில், பாதியைதான் எங்களுக்கு சம்பளமாக கொடுப்பார். ஆனால், விவேக் அப்படி இல்லை. தன்னுடன் நடிக்கும் நடிகர்களுக்கு தினமும் எவ்வளவு சம்பளமோ அப்படியே வாங்கி கொடுப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

எம்.குமரேசன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… விஜய் எடுத்த முக்கிய முடிவு!

இரண்டு குழந்தைகள் அவசியம்… சந்திரபாபு நாயுடு கொண்டு வரும் புது ரூல்ஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel