கங்குவா படத்தைப் பார்த்து ரசிகர்கள் நொந்துக்கொண்டு இருக்க, படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை திஷா பதானி தனது இன்ஸ்டாகிராமில் செம கிளாமராக போஸ் கொடுத்துள்ளார்.
ஏற்கனவே கங்குவா படம் பார்த்து செம கடுப்பில் இருக்கும் நெட்டிசன்கள் , இந்த போட்டோவைப் பார்த்து மேலும் கடுப்பாகி, கங்குவா படத்தில் என்னத்த பெருசா நடிச்சீங்க என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, திஷா பதானியின் தந்தையிடத்தில் ஒருவர் 25 லட்சத்தை ஆட்டையை போட்டு விட்டு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை திஷா பதானியின் தந்தை ஜெகதீஷ் பதானி உத்தரபிரதேச மாநிலம் ரபரேலியில் வசித்து வந்தார். இவர்,ஓய்வு பெற்ற டி.எஸ்.பி ஆவார். இந்த நிலையில், இவரை அணுகிய ஒரு கும்பல், தங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக கூறி, அரசு அமைக்கும் கமிஷன்களில் உயர் பதவி வாங்கி தருவதாக தெரிவித்துள்ளனர். இதை நம்பிய அவர், கொஞ்சம் கொஞ்சமாக 25 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளார்.
பணம் கொடுத்து 3 மாதங்களாகியும் ஜெகதீஷ் பதானிக்கு எந்த கமிஷன்களிலும் தலைவர் அல்லது துணை தலைவர் பதவியும் கிடைக்கவில்லை. பணத்தை திருப்பி கேட்ட போது, அந்த கும்பல் கடுமையாக பேசியுள்ளனர்.
இதையடுத்து, ஜெகதீஷ் பதானி ரபரேலி போலீசில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து , வழக்குப்பதிவு செய்த போலீசார், ஷிவேந்திர பிரதாப் சிங் என்பவர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். அந்த கும்பல் தலைமறைவாகி விட்டது.
முன்னாள் டி.எஸ்.பியே மர்ம கும்பலிடத்தில் பணத்தை கொடுத்து ஏமாந்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்