அனிருத்துடன் திருச்சிற்றம்பலம் பார்த்த தனுஷ்

சினிமா

இயக்குனர் மித்ரன் இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று (ஆகஸ்ட் 18) திரையரங்குகளில் வெளியானது.

கலாநிதி மாறன் தயாரிப்பில், இசையமைப்பாளர் அனிருத் இசையில் இப்படம் வெளியாகியுள்ளது. தனுஷ் உடன் பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தனுஷ் இப்படத்தில் உணவு டெலிவரி பாய் ஆக நடித்துள்ளார். நித்யா மேனன் தனுஷின் சிறு வயது தோழியாகவும், பிரியா பவானி சங்கர் மற்றும் ராஷி கண்ணா இருவரும் தனுஷை விரும்புபவர்களாக நடித்துள்ளனர்.

பிரகாஷ் ராஜ் தந்தையாகவும், பாரதி ராஜா தாத்தாவாகவும் நடித்துள்ளனர்.

actor dhanush thiruchitrambalam released

தனுஷின் ஜகமே தந்திரம், தி கிரே மேன் உள்ளிட்ட படங்கள் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியானதால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதனை தொடர்ந்து, தனுஷ் நடிப்பில் 16 மாதங்கள் கழித்து திருச்சிற்றம்பலம் திரையரங்குகளில் வெளியாவதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு, 7 வருடங்களுக்கு பிறகு தனுஷ் மற்றும் அனிருத் இணையும் காம்போவும் ஒரு காரணம் ஆகும்.

actor dhanush thiruchitrambalam released

இன்று முதல் நாள் முதல் காட்சியை நடிகை ராஷி கன்னா திரையரங்கில் பார்த்து ரசித்தார். மேலும் தனுஷ் மற்றும் அனிருத் ரசிகர்களோடு சேர்ந்து ரோகினி திரையரங்கில் படத்தை பார்த்து ரசித்தனர்.

படம் வெளியாவதற்கு முன்பு ரசிகர்கள் திரையரங்கிற்கு வெளியே தனுஷ் கட்டவுட் வைத்து வெடி வெடித்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

actor dhanush thiruchitrambalam released

முன்னணி நடிகர்களின் திரைப்படம் என்றாலே திரையரங்குகளில் காலை 4 மணி காட்சி வெளியாகும்.

ஆனால் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படம் மற்றும் தனுஷின் திருச்சிற்றம்பலம் இரண்டுமே முதல் காட்சி காலை 7 மணிக்குதான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

மோனிஷா

திருச்சிற்றம்பலம்: தனுஷ் கேரக்டர் என்ன?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.