திருச்சிற்றம்பலம் படத்தின் 4வது பாடல் வெளியானது!

சினிமா

நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் தேன்மொழி பாடல் இன்று (ஜூலை 30) வெளியானது.

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் படங்களுக்கு பிறகு இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் ஆகஸ்ட் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளர் அனிருத்தும் தனுஷும் இணைந்துள்ளனர். மேலும், திருச்சிற்றம்பலம் படத்தில் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர் ஆகியோருடன் இயக்குநர் பாரதிராஜாவும், பிரகாஷ் ராஜும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏற்கெனவே இந்தப் படத்திலிருந்து தாய் கிழவி, மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே, லைஃப் ஆஃப் பழம் ஆகிய பாடல்கள் வெளியாகின.

அவை அனைத்தும் யூடியூப்பில் பயங்கர வைரலாகி வரும் நிலையில், இன்று (ஜூலை 30) அப்படத்தில் இடம்பெற்றிருக்கும் தேன்மொழி என்ற பாடல் வெளியாகியது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். வெளியான சில மணி நேரங்களிலேயே இந்தப் பாடல் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.
ஜெ.பிரகாஷ்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.