actor dhanush directing new movie

‘D 50’ பிறகு மீண்டும் இயக்குநர் அவதாரமெடுக்கும் தனுஷ்

சினிமா

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத் தன்மை உடையவர் தனுஷ். இவரது நடிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி கேப்டன் மில்லர் படம் வெளியாக உள்ளது. மேலும் தனுஷ் இயக்கி நடிக்கும் D 50 படமும் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.

தனுஷ் இயக்கத்தில் நடிகர் ராஜ்கிரண் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியான பா.பாண்டி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து அடுத்து ஒரு ஃபேன்டஸி படத்தை இயக்க தனுஷ் திட்டமிட்டார். ஆனால் ஒரு சில காரணத்தினால் அந்த படம் உருவாகவில்லை. அதன் பின் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்த தனுஷ், தற்போது D 50 படம் மூலம் மீண்டும் இயக்குனராக தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் D 50 படத்திற்கு பின் மூன்றாவது முறையாக ஓர் புதிய படத்தை தனுஷ் இயக்க உள்ளாராம்.

இந்த படத்தில் தனுஷின் நெருங்கிய உறவினரின் மகன் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் D 51 படத்தில் தனுஷ் நடித்து முடித்த பிறகு தான், தனுஷ் இயக்கும் 3வது படத்தின் பணிகள் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

பெண்கள் பாதுகாப்பு… கமலின் லிப்லாக்?: வறுத்தெடுத்த பிக்பாஸ் போட்டியாளரின் மனைவி!

காலமானார் புதுச்சேரி கண்ணன்- அவர் செய்த சாதனை இதுதான்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *