Actor Delhi Ganesh passes away!

நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்!

சினிமா

நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (நவம்பர் 9) இரவு 11.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 81.

இந்திய சுதந்திரத்திற்கு முன்பு 1944 ஆம் ஆண்டு நெல்லையில் பிறந்த டெல்லி கணேஷ், இந்திய விமானப்படையில் பணியாற்றியவர். நடிப்பின் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக வேலையை விட்டுவிட்டு நாடகங்களில் நடித்து வந்தார்.

அவரின் திறமையை கண்ட மறைந்த பிரபல இயக்குநர் கே.பாலச்சந்தர் தனது ‘பட்டின பிரவேசம்’ படத்தின் மூலம் டெல்லி கணேஷை சினிமாவில் அறிமுகம் செய்தார்.

சிந்து பைரவி, நாயகன், அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி தெனாலி முதல் அரண்மனை 4, இந்தியன் 2 வரை என பல்வேறு மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திரம், நகைச்சுவை, வில்லன் என பலவித கதாப்பாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

சமூகவலைதளங்கள் மூலம் டிரெண்ட் மாறினாலும் சினிமாவில் இருந்து தனது தடத்தை மாற்றாத அவர் டிவி சீரியல், குறும்படங்கள், வெப் சீரிஸ் என நடித்து வந்தார். நடிப்பு மட்டுமின்றி, சிறந்த டப்பிங் கலைஞராகவும் இருந்தார்.

வயது முதிர்வு காரணமாக கடந்த 3 நாட்களாகவே டெல்லி கணேஷ் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், நேற்று இரவு 11.30 மணியளவில் சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது.

அவரது உடல் தற்போது ராமாபுரம் இல்லத்தில் திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

டாப் 10 நியூஸ் : நடிகர் டெல்லி கணேஷ் மறைவு முதல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வரை!

கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: கீரை கிடைக்கவில்லையா? கவலைப்படாதீர்கள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *