கடந்த சில தினங்களாக பொன்னியின் செல்வன், விக்ரம் படங்களின் வெற்றி விழா அது தொடர்பான சர்ச்சைகள் ஊடகங்களில் பிரதான செய்திகளாக இடம் பிடித்திருந்த நிலையில் நடிகர் சாய் தீனா மதம் மாறி இருப்பது தற்போது முக்கிய செய்தியாகியுள்ளது.
‘விருமாண்டி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சாய் தீனா. தொடர்ந்து கொம்பன், தெறி, உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார்.
கரடுமுரடான தோற்றத்தில் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தனிப்பட்ட முறையில் சாந்தமானவர் என்பதுடன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் சினிமாக்காரர்.
சாய் தீனா சமூக வலைத்தளங்களில் சமூகம் குறித்து அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும் பதிவுகளை வெளியிட்டும், பேசியும் வருகிறார்.
பேச்சோடு மட்டுமல்லாமல், வட சென்னை பகுதி வாசியான இவர், தனது பகுதியில் வசிக்கும் இளைஞர்கள், மாணவர்கள் தவறான வழியில் செல்லக்கூடாது என்பதற்காக தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்.
கொரோனா காலத்தில் வீடுகளை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து கஷ்டப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை செய்தார்.
இந்நிலையில், சாய்தீனா, புத்தபிக்கு மெளரியா முன்னிலையில் 22 உறுதிமொழிகளை ஏற்று தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் புத்த மதத்திற்கு மாறியுள்ளார்.
மதம் மாறியது குறித்து சாய் தீனாவிடம் கேட்ட போது, எனக்கு பிடித்திருக்கிறது அது என் குடும்ப உறுப்பினர்களுக்கும் பிடித்தது. அதனால் புத்த மதத்திற்கு மாறினேன்.
இதில் வேறு எந்த அரசியல் நோக்கமும் இல்லை. எல்லா மதங்களும் எனக்கு பிடிக்கும் அதில் முதன்மையானதாக புத்தம் இருக்கிறது என்றார் சிரித்துக்கொண்டே.
இராமானுஜம்
கோவை சம்பவம் : காலையிலேயே களமிறங்கிய என்.ஐ.ஏ அதிகாரிகள்!
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது முட்டை வீச்சு!