விடாமுயற்சி படத்திற்குப் பிறகு நடிகர் அஜித் தனது 63ஆவது படமான குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த நடிகர் அஜித், தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியை சந்தித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஹைதராபாத் நகரில் நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் விஷ்வம்பரா படத்தின் படப்பிடிப்பு நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு தளத்திற்கு அருகில் நடைபெற்று வந்தது.
இந்த தகவலை அறிந்ததும் நடிகர் அஜித், விஷ்வம்பரா படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று நடிகர் சிரஞ்சீவி மற்றும் படக்குழுவினரை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.
அப்போது அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சிரஞ்சீவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் நடிகர் அஜித்தின் முதல் படமான “பிரேம புஸ்தகம்” படத்தின் இசை வெளியீட்டு விழா தனது தலைமையில் நடைபெற்றதையும், அஜித்தின் மனைவி ஷாலினி குழந்தை நட்சத்திரமாக தன்னுடன் படத்தில் நடித்துள்ளார் என்றும், இத்தனை ஆண்டுகளில் அஜித்தின் வளர்ச்சியை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் நடிகர் சிரஞ்சீவி குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அஞ்சலியை தள்ளிவிட்ட பாலைய்யா… வைரல் வீடியோ..!
செல்போனில் பேசிக்கொண்டே காரை இயக்கிய டிடிஎப் வாசன் கைது!
சூர்யா 44 வில்லன் இவரா..? கார்த்திக் சுப்புராஜின் சர்ப்ரைஸ்..!