பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் (82) உடல்நலக்குறைவு காரணமாக இன்று (நவம்பர் 11) காலமானார்.
1966 ஆம் ஆண்டு வெளியான ‘ரங்குல ரத்னம்’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார் பழம்பெரும் நடிகர் சந்திர மோகன். இவர் 1975 ஆம் ஆண்டு வெளியான ‘நாளை நமதே’ படத்தில் எம்ஜிஆருக்கு தம்பியாக நடித்திருந்தார். கமல், ஸ்ரீபிரியா நடித்த ‘நீயா’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து ஏராளமான தமிழ் படங்களில் நடித்த சந்திரமோகன் இரண்டு நந்தி விருதுகள், ஒரு ஃபிலிம்ஃபேர் விருது ஆகிய விருதுகளை வென்றுள்ளார்.
சமீபத்தில் உயிரிழந்த நடிகர் சரத்பாபுவிற்கு மருத்துவமனையில் ஏராளமான உதவிகளையும் செய்திருந்தார். இந்நிலையில் இதய நோய் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் சந்திர மோகன்.
இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி நடிகர் சந்திர மோகன் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு தெலுங்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சந்திர மோகனின் இறுதிச்சடங்கு நவம்பர் 13 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
ரவுடி கருக்கா வினோத் மீது குண்டாஸ் பாய்ந்தது!
பட வாய்ப்பு அமையவில்லை: மேலாளரை மாற்றும் பிளாக்பஸ்டர் பட நடிகை!