சிறுநீரக செயலிழப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் போண்டா மணி நேற்று (டிசம்பர் 23) இரவு காலமானார். அவருக்கு வயது 60.
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் நகைச்சுவை நடிகர் போண்டா மணி தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் சிறுநீர செயலிழப்பு காரணமாக மாதம் ஒருமுறை மருத்துவமனைக்கு சென்று டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
இந்தசூழலில் நடிகர் போண்டா மணி நேற்று இரவு பொழிச்சலூரில் உள்ள தனது வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரது குடும்பத்தினர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் போண்டா மணி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
1991-ஆம் ஆண்டு வெளியான பவுனு பவனுதான் படத்தின் முலம் திரையுலகிற்கு அறிமுகமான போண்டா மணி, சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம், வசீகரா உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக கண்ணும் கண்ணும் படத்தில் நடிகர் வடிவேலுவுடன் ஒரு காட்சியில் வரும் போண்டா மணி, ‘போலீஸ் வந்து அடிச்சு கேட்டாலும் நான் எங்க இருக்கேனு சொல்லிராதீங்க’ என்ற அவரது வசனம் மிகவும் புகழ்பெற்றது. அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போண்டா மணியின் இறுதிச்சடங்கு சென்னை பொழிச்சலூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற உள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இரண்டே வாரங்களில் ஆதித்யா எல்1 இலக்கை அடையும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!