பரத் நடிக்கவுள்ள காளிதாஸ் 2 படத்தின் படிப்பிடிப்பை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று (ஜூலை 8) தொடங்கி வைத்தார்.
கடந்த 2003-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானவர் பரத். தொடர்ந்து காதல், பட்டியல், எம்டன் மகன் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமானார்.
2013-ஆம் ஆண்டுக்கு பிறகு இவரது படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில், 2019-ஆம் ஆண்டு வெளியான காளிதாஸ் படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்தார்.
ஸ்ரீ செந்தில் இயக்கிய இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக துப்பறியும் கதாபாத்திரத்தில் பரத் நடித்திருப்பார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தொடர்ந்து நடுவன், Last 6 Hours உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்தநிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு பரத் நடித்துள்ள காளிதாஸ் 2 படம் மீண்டும் உருவாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று சென்னையில் குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார்.
இரண்டாவது பாகத்தையும் செந்தில் வேல் தான் இயக்குகிறார். பரத், அஜய் கார்க்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, சாம் சி.எஸ்.இசையமைக்கிறார். கிரைம் த்ரில்லராக உருவாகும் காளிதாஸ் 2 திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புதிய கிரிமினல் சட்டத்தில் திருத்தம்… ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு!
ஜாமீன் பெற கூகுள் லொகேஷன்… முடியவே முடியாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு!