“ரெட் ஜெயண்ட் என்ற பெயரை பலர் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர்” என இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
ஆர்.ஆர்.கிரியேட்டிவ் கமர்ஷியல் நிறுவனம் சார்பில் என்.சந்திரமோகன் ரெட்டி தயாரிக்கும் படம், ‘என்னை மாற்றும் காதலே. ஜலபதி.பி. இயக்கியிருக்கும் இப்படத்தில் புதுமுகங்கள் விஷ்வ கார்த்திகேயா, கிருத்திகா சீனிவாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்களுடன் கே.பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ரதன் இசையமைக்க, கல்யாண்.பி. ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் நேற்று (நவம்பர் 8) நடைபெற்றது.

அதில் கலந்துகொண்ட இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ், “எதைப் பார்த்தாலும் ரெட் ஜெயண்ட்தான். அவர்களை விட்டால் யாரும் கிடையாது. எல்லாப் படங்களையும் ரெட் ஜெயண்ட்தான் வளைத்துப் போட்டிருக்கிறார்கள் என எல்லோரும் பேசுவதை நான் காதுபட கேட்டிருக்கேன்.
ஆனால், உண்மை என்னவென்றால் ரெட் ஜெயண்ட் என்ற பெயரை பலர் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். ரெட் ஜெயண்ட்டினால் நிறைய நன்மை இருக்கிறது. நிறைய படங்களை அவர்கள்தான் வெளியிடுகின்றனர்.

அதில் அவர்கள் வெற்றியும் அடைந்துள்ளனர். அதன்மூலம் பல படங்கள் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. பெரிய நிறுவனங்கள்கூட தங்களுடைய படங்களை ரெட் ஜெயண்ட்டே ரிலீஸ் செய்ய வேண்டும் என விரும்புகின்றனர்” என்றார்.
ஜெ.பிரகாஷ்
கேக் வெட்டி கொண்டாடிய பொல்லாதவன் குழுவினர்!
கனிமொழி வெளியிட்ட ஆண்ட்ரியா பாடல்!