இயக்குநர் சிறுத்தை சிவாவின் உடன்பிறந்த சகோதரர் பாலா.
நடிகர் ஆகும் ஆர்வத்தில் தமிழ் சினிமாவில் ‘அன்பு’ படம் மூலம் நாயகனாக அறிமுகமானார் பாலா.
அதனை தொடர்ந்து ‘காதல் கிசுகிசு’, ‘கலிங்கா’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இவைகளில் எந்தப்படமும் வணிகரீதியாக வெற்றி பெறவில்லை. அதனால் குணசித்ர கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார்.
‘வீரம்’ படத்தில் அஜித்குமார் தம்பிகளில் ஒருவராக நடித்தார். மலையாள படங்களில் அதிகமாக நடித்து வரும் பாலா பாடகி அம்ருதாவை, 2016ம் ஆண்டு திருமணம் செய்தார். பின்னர் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
அடுத்து டாக்டர் எலிசபெத்தை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் தனது வீட்டுக்குள், 3 பேர் கும்பல் அத்துமீறி நுழைய முயன்றதாக கொச்சி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதுபற்றி பாலா கூறி இருப்பதாவது, நிகழ்ச்சி ஒன்றுக்காகக் கோட்டயம் சென்று இருந்தேன். வீட்டில் என் மனைவி எலிசபெத் மட்டும்தனியாக இருந்தார்.
அப்போது கஞ்சா போதையில் வந்த 3 பேர், கதவைத் தட்டி அத்துமீறி நுழைய முயன்றுள்ளனர். பக்கத்து வீட்டிலும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் முகம் சிசிடிவியில் பதிவாகி உள்ளது.
அவர்கள் கார் எண்ணையும் போலீஸில் கொடுத்துள்ளேன். நானும் மனைவியும் நடைபயிற்சி சென்றபோது, எங்கள் காலில், சில நாட்களுக்கு முன் 2 பேர் விழுந்தனர். அவர்கள்தான் இந்தத் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என கூறியுள்ளார்.
இராமானுஜம்
பொங்கல் காசு கொடுத்த மு.க.ஸ்டாலின்
சீறிப்பாயும் காளைகள் : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது!