56 வயதில் 23 வயது பெண்ணுடன் திருமணம்: நடிகர் பப்லு சொல்லும் விளக்கம்!

சினிமா

இரண்டாவது திருமணம் குறித்த தகவலுக்கு நடிகர் பப்லு விளக்கம் அளித்துள்ளார்.

பப்லு என்ற பிருத்விராஜ் தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்கள், வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தவர். இதைத்தொடர்ந்து, தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.கேம் ஷோக்களில் நடுவராக பணியாற்றியவர்.

இவருக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் இருக்கும் நிலையில், அவரது மனைவிக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு எழுந்ததால் பிரிந்துவிட்டனர்.

தற்போது 56 வயதாகும் நடிகர் பப்லு 23 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. சோசியல் மீடியாக்களில், 56 வயது நபர் 23 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளாரா? என்று பரபரப்பாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது.

இதனால் பப்லு அதுகுறித்து ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.

“இதுகுறித்து என்னிடம் பலரும் கால் பண்ணி கேட்கிறார்கள். நான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தது உண்மைதான். ஆனால் இன்னும் செய்து கொள்ளவில்லை. நான்  எது செய்தாலும் வெளிப்படையாக செய்ய நினைப்பவன். அனைவரது ஆசிர்வாதத்தோடுதான் இரண்டாவது திருமணம் செய்வேன். திருட்டுத்தனமாக செய்ய மாட்டேன்” என்று தெரிவித்திருக்கிறார். 

இராமானுஜம்

+1
2
+1
0
+1
0
+1
1
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.