‘ஏய், நீ ரொம்ப அழகா இருக்க’ : சிறுவனுக்கு வலை வீசிய லப்பர் பந்து நடிகர்!

Published On:

| By Kumaresan M

சென்னையை சேர்ந்த 16 வயது சிறுவனின் பெற்றோர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தனர்.

அந்த புகாரில், “தங்களது மகன் பார்க்கிற்கு சென்ற போது இளைஞர் ஒருவர் நைசாக பேச்சு கொடுத்துள்ளார். ‘நீ ரொம்ப அழகா இருக்க, ஐ லவ்யூ டா ‘என கூறி பாலியல் இச்சைக்கு பயன்படுத்த முயற்சித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த விருகம்பாக்கம் போலீசார், இளைஞர் ஒருவரை கைது செய்தனர். விசாரணையில் அவரின் பெயர் ஹரி என்பது தெரிய வந்தது. சினிமாவில் பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். சீரியல்களிலும் நடித்துள்ளார். அண்மையில் வெளியான லப்பர் பந்து படத்திலும் ஹரி நடித்திருப்பது தெரியவந்தது.

சினிமா துணை நடிகைகளோடு உல்லாசமாக இருப்பதை வாடிக்கையாக வைத்துள்ள ஹரி, உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் சிறுவனிடத்தில் தவறாக நடக்க முயன்றதாக போலீசில் கூறியுள்ளார். விருகம்பாக்கம் போலீசார் போக்சோ வழக்கில் ஹரியை கைது செய்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share