சின்னத்திரை நடிகை திவ்யாவை தாக்கிய வழக்கில் அவரது கணவரான நடிகர் அர்ணவ் போலீசாரால் இன்று (அக்டோபர் 14) கைதுசெய்யப்பட்டார்.
சின்னத்திரையில் நடிகரான அர்ணவ் மீது அவரது மனைவி திவ்யா, அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகர் அர்ணவ் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் அர்ணவ் இன்று (அக்டோபர் 14) விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீஸ் தரப்பில் கடந்த அக்டோபர் 12ம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால், அவர் ஆஜராகவில்லை. அவருக்குப் பதில் அவரது வழக்கறிஞர் அனைத்து மகளிர் காவல்நிலையத்திலுக்குச் சென்று, ‘என்னுடைய மனுதாரருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டிருப்பதால், இன்று ஆஜராக முடியவில்லை.
ஆகையால், வரும் 18ம் தேதி அவர் ஆஜராவார்’ என மனு அளித்துள்ளார்.
ஆனால், அதை காவல் துறையினர் ஏற்கவில்லை. இந்த நிலையில், ’அர்ணவ் மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை.
அவர், போலீஸ் விசாரணையிலிருந்து தப்பிப்பதற்காக இதுபோன்று நாடகமாடுகிறார். மேலும் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கிறார்’ என போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்,
போரூர் உதவி கமிஷனர் தலைமையில் தனிப்படை போலீசார் பூந்தமல்லிக்கு அருகில் நேமம் என்ற இடத்தில் படப்பிடிப்பில் இருந்த அர்ணவை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
தன்னை போலீசார் கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவே அர்ணவ், இத்தனை நாட்கள் தலைமறைவாக இருந்ததாகவும், இந்த இடைப்பட்ட நாட்களில் அவர் முன் ஜாமீன் எடுக்கும் பணிகளில் ஈடுபட்டதாகவும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜெ.பிரகாஷ்
இமாச்சல் பிரதேசம்: நவம்பர் 12 சட்டமன்றத் தேர்தல்!
பன்னீர் மகனை கைது செய்ய களமிறங்கிய தங்க தமிழ்ச்செல்வன்