அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்… நிம்மதி பெருமூச்சு விட்ட ரசிகர்கள்!

Published On:

| By Selvam

புஷ்பா 2 திரைப்படம் பார்க்கும்போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி தெலங்கானா உயர்நீதிமன்றம் இன்று (டிசம்பர் 13) உத்தரவிட்டுள்ளது.

டிசம்பர் 4-ஆம் தேதி தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா 2 படத்தின் பிரிமியர் ஷோ  திரையிடப்பட்டது.

இந்த படத்தைப் பார்க்க அல்லு அர்ஜுன் சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி, ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது மகன் ஸ்ரீ தேஜ் படுகாயமடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன், தியேட்டர் அதிபர் சந்தீப், சீனியர் மேலாளர் நாகராஜூ உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சந்தீப், நாகராஜூ ஆகியோரை சிக்கட்பள்ளி போலீசார் நேற்று (டிசம்பர் 12) கைது செய்த நிலையில், அல்லு அர்ஜுன் இன்று கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து நம்பள்ளி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அல்லு அர்ஜூனுக்கு, 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் தரப்பில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜுவ்வாதி ஸ்ரீதேவி, அல்லு அர்ஜுனுக்கு ரூ.50,000 பிணைத்தொகை செலுத்த உத்தரவிட்டு நான்கு வாரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்கினார்.

அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதால், மிகவும் சோர்வடைந்த அவரது ரசிகர்கள் ஜாமீன் கிடைத்ததும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  

செல்வம்

செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் 

அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

அரசியல் பயணம் எப்போது?: சசிகலா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment