அல்லு அர்ஜூன் கைது: வெளியான முக்கிய கடிதம்!
நடிகர் அல்லு அர்ஜூன் கைது விவகாரத்தில், தியேட்டருக்கு வருவதாக 2 நாட்கள் முன்பே போலீசிடம் முறைப்படி அனுப்பிய கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
பிரபல நடிகர் அல்லு அர்ஜூன் நடித்து வெளியாகி உள்ள புஷ்பா 2 படம் அண்மையில் வெளியாகி வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.
இந்த படத்தின் முதல் நாள் காட்சியை காண நடிகர் அல்லு அர்ஜூன், ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டருக்கு படக்குழுவினருடன் சென்றார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் பலியானார்.
தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக, தியேட்டர் உரிமையாளர், மேலாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தியேட்டருக்கு வருவதாக எந்த தகவலும் முன்கூட்டியே தெரிவிக்காததால் துயரமான சம்பவம் நடந்ததாக கூறி அல்லு அர்ஜூன் மீதும் வழக்கு பதிந்த போலீசார், அவரை இன்று கைது செய்தனர்.
அவரை 14 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே நேரத்தில் அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தெலுங்கானா உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இதற்கிடையே, இந்த வழக்கில் திடீர் திருப்பமாக டிசம்பர் 2-ம் தேதியே அல்லு அர்ஜூன் டிசம்பர் 4-ஆம் தேதி படக்குழுவினருடன் தியேட்டருக்கு வருகிறார். பாதுகாப்பு தாருங்கள் என்று காவல்துறைக்கு தியேட்டர் நிர்வாகம் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.
சிக்கட்பள்ளி போலீஸ் உதவி கமிஷனருக்கு எழுதப்பட்ட அந்த கடிதத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ் உயரதிகாரி பெற்றுக் கொண்டதற்கான முத்திரையும் வைக்கப்பட்டுள்ளது. முறைப்படி நடிகர் அல்லு அர்ஜூனும், படக்குழுவினரும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்ட நிலையில், இந்த கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட போது அவரின் மனைவி கண் கலங்கி அழுத காட்சியும் அவரின் ரசிகர்களை உருக வைத்தது.
குமரேசன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புதிய பயிற்சி… திடீர் வேகம்… ஸ்டாலினுக்கு நடந்தது என்ன?
ஈரோடு காட்டன்… ஆவின் நெய்… ஏற்றப்பட்ட திருவண்ணாமலை தீபம்!
தனி விமானத்தில் திரிஷாவுடன் சென்ற விஜய்… எங்கே தெரியுமா?
திண்டுக்கல் தீ விபத்து… திக் திக் நிமிடங்களை சொல்லும் தீயணைப்பு வீரர்
மகா தீபம்… கோவிலுக்குள் விவிஐபிகளுக்கு தனிமேடை!
நெல்லைக்கு ரெட் அலர்ட்… 11 மாவட்டங்களில் கனமழை!