விடா முயற்சி : காய்ச்சலுடன் நடித்த அஜித்… கஷ்டப்பட்டும் வீணானதால் அப்செட் !

Published On:

| By Kumaresan M

நடிகர் அஜித்குமார் நடித்த விடா முயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிலீசாவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இப்போதெல்லாம் உலகம் முழுக்க படங்கள் வெளியாகின்றன. வெளிநாடுகளில் ரிலீஸ் செய்ய வேண்டியது இருந்தால், ரிலீசுக்கு 15 நாட்களுக்கு முன்னரே அந்த படம் சென்ஸார் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அந்த நாடுகளில் படம் ரிலீஸ் செய்வதற்கு 15 நாட்களுக்கு முன்னரே முறையான ஆவணங்களை சமர்ப்பித்து அனுமதி வாங்கியிருக்க வேண்டும்.

ஆனால், கிறிஸ்துமஸ் காலத்தில் பல வெளிநாடுகளிளில் அலுவலகங்கள் விடுமுறை என்பதால் முறையான அனுமதியை வாங்க படக்குழு தவறி விட்டது.

விடா முயற்சி படத்துக்காக கடைசிக்கட்டத்தில் ஒரு பாடலை சேர்க்க திட்டமிட்டுள்ளனர். அந்த சமயத்தில் அஜித்துக்கு கடும் காய்ச்சலும் இருந்துள்ளது.

அந்த சூழலிலும் நடித்து கொடுத்து பொங்கலுக்கு படம் வெளியாக வேண்டுமென ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். எனினும், பொங்கலுக்கு படம் வெளியாகாததால் அஜித்குமார் கடும் அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குமரேசன்

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்… பொங்கல் போனஸ் எவ்வளவு?

எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை… உறுதி செய்த உயர்நீதிமன்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel