நடிகர் அஜித் குமார் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் சஞ்சய் தத் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் சந்தோஷமாக நேரம் செலவழித்து வருகின்றார்.
இந்நிலையில் சமீபத்தில் தனது மகன் ஆத்விக்கின் 9-வது பிறந்தநாளை மனைவி ஷாலினி, மகள் அனோஷ்காவுடன் சென்னையில் மிக விமரிசையாக கொண்டாடியுள்ளார் அஜித். பிறந்தநாள் நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஷாலினி அஜித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அஜித் அவர்களின் மகன் ஆத்விக் கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உள்ள நபர் என்பதால் அவரது பிறந்தநாள் கேக் கால்பந்து வடிவத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. ஆத்விக் கால்பந்து ஜெர்சியை அணிந்து இருப்பதை நாம் அந்த புகைப்படங்களில் காண முடிகிறது.
இந்த விழாவில் அஜித் தனது மனைவி ஷாலினிக்கு காதலுடன் முத்தம் கொடுக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
விடாமுயற்சி படத்திற்குப் பிறகு நடிகர் அஜித்தின் 63-வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க உள்ளது. விரைவில் படப்பிடிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சனாதனம்… உதயநிதி, சேகர்பாபு, ஆ.ராசா பதவிகள் என்னாகும்? உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!
தனுஷ் வெளியிட்ட ஸ்வேதா மோகனின் “பெண் – The Anthem”!
Gold Rate: உச்சம் தொட்டது தங்கம்… ஒரு சவரன் எவ்வளவுன்னு பாருங்க!
பரிசு தராத கணவன்… கத்தியால் குத்திய மனைவி – பெங்களூரில் நடந்த விபரீதம்!