”ஏகே 62” படத்திற்குப் பிறகு ’பரஸ்பர மரியாதை பயணம்’ என்ற பெயரில் அஜித் உலக மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு பொங்கலுக்கு அஜித் நடிப்பில் துணிவு படம் வெளியானது. இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவிருந்தார்.
ஆனால் அவர் அந்த படத்தில் இருந்து விலகினார். இதனால் ஏகே 62 படத்தின் இயக்குநர் யார் என்ற பேச்சு பரவி வந்தது. இப்படி இருந்து வந்த நிலையில், மகிழ் திருமேனி இயக்க இசையமைப்பாளராக அனிருத்தும் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷாவும் உள்ளிட்டோர் பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் ஏகே 62 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பிற்காக அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் ஒரு சுவாரஸ்யமான தகவலை நடிகர் அஜித்தின் மேலாளர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், “நடிகர் அஜித் பரஸ்பர மரியாதை பயணம் என்ற பெயரில் 2வதுகட்ட உலக மோட்டார் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
லைகா புரோடக்ஷன்ஸ் உடன் தனது படப்பிடிப்பை முடித்த பிறகு இந்த திட்டத்தை அவர் தொடங்கவுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் இறுதியில், உலக சுற்றுப்பயணத்தின் முதல் சுற்றை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பயணம் செய்து முடித்துள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

7கண்டங்கள், 60நாடுகள் என மோட்டார் சைக்கிள் மூலம் பயணம் மேற்கொள்ள 18 மாதங்கள் ஆகும் எனவும் மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணம் அஜித்தின் நீண்ட நாள் கனவு எனவும் அஜித்துக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.
மோனிஷா
தலைமைப் பொறுப்பிற்குத் தகுதியானவரா? எடப்பாடியை விமர்சித்த அமர் பிரசாத் ரெட்டி
கட்சிக்காக உழைத்தவர்களை வேவு பார்ப்பதா?: பாஜக ஐடி விங் செயலாளர் விலகல்!