பொங்கல் வெளியீட்டு போட்டியில் களமிறக்கப்பட உள்ள துணிவு படத்திற்கான டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜி தமிழ் தொலைக்காட்சி நிறுவனம்தான் துணிவு படத்தின் முதலீட்டு தயாரிப்பு நிறுவனம். அந்த நிறுவனம் தயாரிக்கும் படங்களின் தொலைக்காட்சி உரிமையை அவர்கள் விற்பதில்லை. இதுதான் நடைமுறை.
ஆனால் துணிவு தொலைக்காட்சி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி என ஊடகங்களில் செய்தி வெளியாகும் காமெடிகள் நிகழக் கூடும்.
துணிவு படம் உண்மையில் நடைபெற்ற வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகும் கதைக்களத்தை கொண்டது.
இந்த படத்தை அஜித்குமார் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என இரட்டை வேடத்தில் அஜித்குமார் நடித்துள்ளார்.
மலையாள நடிகை மஞ்சுவாரியார் நாயகியாகவும் மற்றும் சமுத்திரகனி, ஜான் கொக்கன், வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் பாடல் ஒன்றை அனிரூத் பாடியுள்ளார். விரைவில் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது.
இந்தநிலையில் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மலையாள நடிகை மஞ்சு வாரியர் தனது டப்பிங்கை தொடங்கியுள்ளார். அது சம்பந்தமான புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் அஜித்குமார் எப்போது டப்பிங் பேசுவார் என்கிற கேள்வி சினிமா வட்டாரத்தில் எழுப்பப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இந்த படம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து தயாரிப்பு தரப்புக்கும் நடிகர் அஜித்குமாருக்கும் இடையில் கருத்துவேறுபாடுகள் இருந்து வருகிறது. ஆனால் அதையெல்லாம் கடந்து தற்போது படப்பிடிப்பு முடிந்து இருக்கிறது.
அந்த வகையில் அஜித்திற்கு கொடுக்க வேண்டிய சம்பளம் முழுமையாக கொடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
டப்பிங் பணிகள் தொடங்குவதற்கு முன்பாகவே முழு சம்பளத்தையும் வாங்கிவிடுவது அவரது வழக்கம். அவ்வாறு செட்டில் செய்யவில்லை என்றால் டப்பிங் பேச அஜீத்குமார் வர மாட்டார் என்பது திரையுலகினருக்கு தெரியும்.
படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அஜித்குமார் பைக்சுற்றுப்பயணம் சென்று விட்டார். இப்போது படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டது.
ஆனால் அஜித்துக்கான சம்பளம் எப்போது கொடுப்பது, அவர் எப்போது வந்து டப்பிங் வேலையை முடித்துக் கொடுப்பார் என்பது இதுவரை உறுதியாகவில்லை.
இது போன்று துணிவு படத்தில் ஏகப்பட்ட இடியாப்ப சிக்கல்கள் இருக்கிறது. இருப்பினும் அஜித்குமாருடன் பேசி அவரை சமாதானப்படுத்தி டப்பிங் பேச வைக்கவும் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் விரைவில் அஜித் தன்னுடைய டப்பிங் பணிகள் வேலையை முடித்துக் கொடுத்து விடுவார், ஏனென்றால் படத்தை தமிழகத்தில் வெளியிட இருப்பது உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது என்கின்றனர் திரையரங்க வட்டாரத்தில்.
இராமானுஜம்
நாங்களும் வரலாமா: த்ரிஷாவிடம் ரசிகர்கள் கேள்வி!