நடிகர் அஜித்குமார் தந்தை காலமானார்!

சினிமா

நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் இன்று (மார்ச் 24) அதிகாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 85.

கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த சுப்பிரமணியம் அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

இந்தநிலையில் இன்று அதிகாலை சென்னையில் அவர் காலமானார். அவரது இறுதிச்சடங்கு பெசன்ட் நகர் மயானத்தில் இன்று நடைபெற உள்ளது.

நடிகர் அஜித்குமார் தந்தை மறைவு செய்தி அவரது ரசிகர்கள் மற்றும் திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜித்குமார் தந்தை மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

செல்வம்

மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை ரூ.6,500ஆக உயர்த்திய புதுச்சேரி

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *