தந்தையின் இறுதிசடங்கு: அஜித் வேண்டுகோள்!

சினிமா

எங்களது தந்தையின் இறுதிசடங்கு ஒரு குடும்ப நிகழ்வாகவே நடைபெற கருதுகிறோம் என்று அஜித்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் (85) உடல்நலக்குறைவால் இன்று (மார்ச் 24) அதிகாலை காலமானார். அவரது இறுதிசடங்கு பெசன்ட் நகர் மயானத்தில் இன்று நடைபெற உள்ளது.

நடிகர் அஜித் குமாரின் ரசிகர்கள் பலரும் அவரது தந்தை மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், எங்களது தந்தையின் இறுதிசடங்கு ஒரு குடும்ப நிகழ்வாகவே நடைபெற கருதுகிறோம் என்று அவரது மகன்கள் அனுப் குமார், அஜித் குமார், அனில் குமார் வேண்டுகோள் வைத்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“எங்களது தந்தையார் பி.எஸ்.மணி (85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கரையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும், அர்ப்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர்.

தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம்.

எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிப்பட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த அறிக்கையில் இரங்கல் செய்திகளைத் தெரிவிப்பதற்காக psmanifamily@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது.

மோனிஷா

யானைகளும் ஆஸ்கர் விருதும்: ரூ.1 கோடி தந்தது சரியா?

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

+1
0
+1
1
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *