யூடியூபர் இர்பான் தனது மனைவி பிரசவத்தின் போது ஆபரேஷன் தியேட்டரில் எடுத்த வீடியோவை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருந்தார்.
அந்த வீடியோவில் குழந்தையின் தொப்புள் கொடியை இர்பான் வெட்டியது சர்ச்சையானது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தற்போது அந்த மருத்துவமனை செயல்பட 10 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை அனுமதித்த பெண் மருத்துவர் நிவேதிதா , இர்பான் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் பற்றி மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி என்பவர் வீடியோ வெளியிட்டு சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், அவர் கூறியுள்ளதாவது, “நடிகர் அஜித்குமார் அவரது மனைவி ஷாலினி பிரசவத்தின்போது ஆபரேஷன் தியேட்டர் உள்ளே இருந்தார். அப்போது, ஷாலினி பட்ட கஷ்டத்தை அவரிடம் இருந்த சின்ன ஹேன்டி கேமராவில் வீடியோ எடுத்துள்ளார்.
பெண்கள் படும் கஷ்டத்தை ஆண்கள் நேரில் பார்த்தால் தான் புரியும் . இதை பார்த்து விட்டால் எந்த ஒரு ஆணும் தன் மனைவியை நடத்தும் விதமே வேறுவிதமாக இருக்கும் என்று நடிகர் அஜித் அப்போது கூறினார்” என்று டாக்டர் பிரகாஷ் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “ஷாலினி நல்லபடியாக குழந்தை பெற்றெடுத்ததும் மருத்துவக்குழுவினருடன் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டார். ஆனால், இர்பான் அறுவை சிகிச்சை அரங்குக்குள் பிரத்யேக உடை அணிந்து சென்றது மட்டுமல்லாமல் சர்ஜிக்கல் சிசரை எடுத்து குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டியுள்ளார். இதுவெல்லாம் நிச்சயம் எல்லை மீறிய செயல். இந்த விஷயத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது… நமது எல்லையை அறிந்து கொள்வதுதான்” என்று தெரிவித்துள்ளார்.
யூடியூபர் இர்பான் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக தகவல்கள் வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ராணுவ வீரர்கள் கொண்டாடும் ‘அமரன்’ !
30 ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்த சுப்பையாவுக்கு ரத்தன் டாடா எழுதிய உயில்!