புதிய லுக்கில் அஜித்: வெளிநாடுகளில் பைக் சுற்றுலா!

சினிமா

வெளிநாட்டிற்கு பைக் சுற்றுலா செல்ல நடிகர் அஜித் குமார் சென்னை விமான நிலையத்திற்கு வந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

அஜித் நடித்த துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வெளியானது. வினோத் இயக்கிய இத்திரைப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வங்கி கொள்ளையை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது.

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

actor ajith bike trip to other countries

நடிகர் அஜித்குமார் பயணங்களின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் ஜம்மு காஷ்மீர், லடாக், கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்கு தனது பைக்கில் சாகச பயணம் மேற்கொண்டார். இவருடன் நடிகை மஞ்சு வாரியர் பயணம் மேற்கொண்டார். இந்தியாவில் தனது பைக் பயணத்தை நிறைவு செய்த நடிகர் அஜித், வெளிநாடுகளில் பைக் பயணம் செய்ய உள்ளார்.

அஜித் தனது 62-ஆவது திரைப்படத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

actor ajith bike trip to other countries

படப்பிடிப்பிற்கு முன்பாக நடிகர் அஜித்குமார் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று பைக் பயணம் செல்ல உள்ளார். இதற்காக அவர் சென்னை விமான நிலையத்திற்கு வந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித்குமாரின் இந்த புதிய தோற்றத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

செல்வம்

இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு கை கொடுத்த கமல்

ஒரிஜினல் புகைப்படம்: வாட்ஸ்அப் கொடுத்த அப்டேட்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *