தனுசுடன் அறிமுகமான நடிகருக்கு நேர்ந்த துயரம்… மருத்துவமனையில் உயிருக்கு போராட்டம்!

Published On:

| By Kumaresan M

நடிகர் தனுஷ் நாயகனாக அறிமுகமான திரைப்படம் துள்ளுவதோ இளமை. கடந்த 2002 ஆம் ஆண்டு இந்தபடம் வெளி வந்தது. கஸ்தூரி ராஜா இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மற்றொரு நடிகர் அபிநய். actor abhinay in hospital

இந்த படத்திற்கு பிறகு ஜங்ஷன் என்ற படத்திலும் ஹீரோவாக நடித்தார். அதற்கு பிறகு, சரியான வாய்ப்புகள் இல்லை. இதனால், சிறுசிறு கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார்.

தமிழில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2014 ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

பட வாய்ப்புகள் சரியாக வராததால் போதிய வருமானம் இல்லாமல் தவித்தார். பல வேளைகளில் அம்மா உணவகங்களில் சாப்பிட்டு வருவதாக சில ஆண்டுகளுக்கு முன் பேட்டி ஒன்றில் அவர் கூறியிருந்தார். actor abhinay in hospital

தற்போது உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அபிநய் சிகிச்சைக்கு உதவி கேட்ட வீடியோ வெளியாகியுள்ளது. வயிறு வீங்கி ஆள் எலும்பும் தோலுமாக இருக்கிறார்.

அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமேன்று கூறப்படுகிறது. அபிநயின் நிலையை கண்டு ரசிகர்கள் வேதனையடைந்துள்ளனர்.

இது தொடர்பாக நடிகர் கயல் தேவராஜ் தன் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டு உதவி கோரியுள்ளார்.

நடிகர் தனுஷ் அபிநய்க்கு உதவி செய்வார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share