தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று(ஜூலை 3) தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
ராக்கி, சாணிகாயிதம் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தற்போது இயக்கி வரும் திரைப்படம் கேப்டன் மில்லர்.
வரலாற்று பின்னணியை மையமாக கொண்டு உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் டிஜி தியாகராஜன் தயாரிக்கிறார்.
இந்த படத்தில் நாயகனாக தனுஷ் மற்றும் நாயகியாக பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், சதீஸ், ஜான் கொக்கன், சுரேஷ் மூர், சிவராஜ் குமார் மற்றும் நிவேதிதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூன் 30 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது குடும்பத்தினருடன் இன்று(ஜூலை 3) ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
அதன்படி , தனது பெற்றோர் மற்றும் மகன்கள் யாத்ரா – லிங்காவுடன் சென்று மொட்டை அடித்து நேர்த்திக்கடனை செலுத்தி உள்ளார். அப்போது நடிகர் தனுஷ் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு வெளியே வந்த போது திடீரென பத்திரிகையாளர் ஒருவர் கீழே விழுந்தார். அவரை தனுஷ் அருகில் சென்று தூக்கிவிட்டார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நடிகர் தனுஷ் அடுத்ததாக ‘ராஞ்சனா’ மற்றும் ‘அட்ராங்கி ரே’ போன்ற படங்களை இயக்கிய இந்தி பட இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் புதிய படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்