Video: தமன்னா, ராஷி கண்ணா கலக்கல் நடனம்… ‘அச்சச்சோ’ சாங் இதோ..!

சினிமா

சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை 1, 2 & 3’ படங்கள் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

அரண்மனை 3 படத்திற்குப் பின் சுந்தர் சி இயக்கிய காஃபி வித் காதல் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதனைத் தொடர்ந்து அரண்மனை 4 படத்தை இயக்கப் போவதாக சுந்தர்.சி அறிவித்தார்.

அந்த படத்தில் விஜய் சேதுபதி, சந்தானம் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

ஆனால், ஏதோ சில காரணத்தினால் விஜய் சேதுபதி இந்த படத்திலிருந்து விலகுவதாக அறிவிக்க, தற்போது அரண்மனை 4 படத்தில் மெயின் ஹீரோவாக சுந்தர்.சி நடித்துள்ளார்.

அவருடன் இணைந்து தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, VTV கணேஷ், கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் அரண்மனை 4 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 14) அரண்மனை 4 படத்தின் புரோமோ பாடலான ‘அச்சச்சோ’ வெளியாகி இருக்கிறது. வழக்கமாக அரண்மனை சீரிஸ் படங்களுக்கென ஒரு தனி ப்ரோமோ சாங்கை சுந்தர் சி வெளியிடுவார்.

அதேபோலத்தான் இந்த ‘அச்சச்சோ’ பாடலும் வெளியாகி இருக்கிறது. இந்த பாடல் முழுக்கவே தமன்னாவும், ராஷி கண்ணாவும் கவர்ச்சிகரமாக நடனமாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

“அச்சோ அச்சோ அச்சச்சோ… ஆவி தான் பாவி கிட்ட சிக்கிக்கிச்சோ’ என்ற விக்னேஷ் ஶ்ரீகாந்த் வரிகளுக்கு, சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகும் வகையில் இசையமைத்திருக்கிறார் ஹிப் ஹாப் தமிழா.

வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி அரண்மனை 4 படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

-கார்த்திக் ராஜா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

CSK Vs MI: பர்ஸ்ட் டைம் இப்படி நடக்குது… கவலையில் ரசிகர்கள்!

முத்ரா கடன் ரூ.20 லட்சம்… புல்லட் ரயில்: பாஜகவின் டாப் 10 கேரண்டி!

மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *