accident in ganguva shooting spot

கங்குவா படப்பிடிப்பு: நடிகர் சூர்யாவுக்கு விபத்து!

சினிமா

கங்குவா படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் நடிகர் சூர்யாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

தற்போது கங்குவா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. கங்குவா உலகம் முழுவதும் 38 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் 2024 ஆம் ஆண்டு வெளியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படப்பிடிப்பின் போது நடிகர் சூர்யாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. சென்னை பூவிருந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் ஈவிபி பிலிம் சிட்டியில் கங்குவா படத்தின் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த போது ரோப் கேமரா அறுந்து விழுந்ததில் நடிகர் சூர்யாவின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து நசதர்பேட்டை போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக இதே ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்ற இந்தியன் 2 படப்பிடிப்பின் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

குஷ்பூ மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு!

த்ரிஷா சர்ச்சை: மன்சூர் அலிகானுக்கு போலீஸ் அவகாசம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *