சமீபத்தில் ஐஸ்வர்யா ராயின் பிறந்த நாளுக்கு கணவர் அபிஷேக்பச்சன் வாழ்த்து கூட சொல்லவில்லை என ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
கடந்த சில மாதங்களாகவே இருவருக்கும் இடையில் விவாகரத்து ஏற்படவுள்ளதாகவும், அதற்கு முக்கிய காரணமே அபிஷேக் பச்சன் தான் எனவும் ஹிந்தி ஊடகங்களில் கிசுகிசு உலா வருகின்றது.
பிரபல நடிகை நிம்ரத் கவுருடன் அபிஷேக் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவலை நடிகை நிம்ரத் மறுத்திருந்தார். அபிஷேக்பச்சன் மவுனம் காத்து வந்தார்.
இந்நிலையில், அபிஷேக் தனது நடிப்பில் வெளியாகியுள்ள, ‘ஐ வாண்ட் டூ டாக்’ படத்தின் ப்ரோமோசனில் கலந்து கொண்டார்.
அப்போது அவர், “‘கெட்டவன் கெட்டவனாக இருப்பதை நிறுத்தவில்லை என்றால், நல்லவன் நல்லவனாக இருப்பதை ஏன் நிறுத்தவேண்டும்?நான் மிகவுமே பாசிட்டிவான ஆள். என்னால் நெகட்டிவாக இருக்க முடியாது, நெகட்டிவிட்டியுடனும் வாழ முடியாது. என்னைப் பற்றி வரக்கூடிய நெகட்டிவிட்டி கருத்துகளுக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருந்தால், நான் அவர்களுக்கு பதில் சொல்வதிலேயே என் வாழ்க்கையை இழந்துவிடுவேன். நான் அப்படிப்பட்ட ஆள் கிடையாது’ என்றார்.
அபிஷேக் அளித்துள்ள பதில், பாலிவுட்டில் தற்போது வைரலாகி வருகின்றது.இதன் வாயிலாக, விவாகரத்து என வதந்தி பேசியவர்களின் வாய்க்கு அபிஷேக் பூட்டுப் போட்டு விட்டார். இதற்கிடையே, நடிகர் அமிதாப்பச்சன் தனது மகன் அபிஷேக் பச்சனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். வாய் இருப்பவர்கள் என்னவென்றாலும் பேசிக் கொள்ளட்டுமென்று அமிதாப்பச்சன் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்த உதவி… காப்பாற்றியவர்களுக்கு ரிஷப் பண்ட் செய்த காரியம்!