கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆசை ஆசையாய். ஆர்.பி.சவுத்ரி தயாரிப்பில், ஜீவா நாயகனாக நடித்த இந்த படத்தின் பாடல்கள் இன்றும் பலரது பேவரைட் ஆக இருக்கிறது.
இந்த படத்தில் தனது கியூட்டான நடிப்பின் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை மீனாட்சி. தொடர்ந்து அன்பே அன்பே, திவான், பேசுவோமா போன்ற தமிழ் படங்களில் நடித்தார்.
தமிழில் அறிமுகமான இவர் தொடர்ந்து மலையாள திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். பிரித்விராஜ் ஜோடியாக நடித்த வெள்ளி நட்சத்திரம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது.
கடைசியாக மலையாளத்தில் 2௦௦5-ம் ஆண்டு வெளியான கபூர் கா தோஸ்த் படத்தில் நடித்து இருந்தார். திடீரென அவர் சினிமாவில் இருந்து காணாமல் போனார். திருமணமான நிலையில் தனது குடும்பத்துடன் பெங்களூருவில் செட்டில் ஆகிவிட்டார்.
இந்நிலையில் 20 வருடங்கள் கழித்து நடிகை மீனாட்சி மீண்டும் பேட்டி ஒன்றில் தோன்றியுள்ளார். அந்த வீடியோவில் அவரைப் பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
2௦ வருடங்களுக்குப் பிறகும், அவரிடம் பெரிதாக எந்த மாற்றமுமில்லை என்பது தான் இந்த அதிர்ச்சிக்குக் காரணம். தற்போது சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வேகமாகப் பரவி வருகிறது.
-பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அனுமதி இல்லாமல் விளம்பரம் வெளியிட்ட பாஜகவுக்கு நோட்டீஸ்: சத்யபிரதா சாகு
‘மிஸ்டர் மனைவி’ சீரியலின் புது ஹீரோயின் இவர்தான்… ஷபானாவுக்கு டஃப் குடுப்பாரா?
Thangalaan: ஆஸ்கர் உறுதி! ‘சீயான்’ விக்ரமின் பர்த்டே ட்ரீட்… புது வீடியோ ரிலீஸ்!