கொடுமை தாங்க முடியாமல் ஜெயம் ரவி பிரிந்தாரா? – மெளனம் கலைத்த ஆர்த்தி

Published On:

| By Selvam

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தது சினிமா உலகில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.

ஆர்த்தியின் கொடுமை தாங்க முடியாததால் தான் ஜெயம் ரவி அவரை விட்டு பிரிந்தார் என பல செய்திகள் உலா வந்தது. யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலரும் இதுதொடர்பாக பலவிதமான கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

இந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆர்த்தி இன்று(செப்டம்பர் 30) வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றி நடந்துவரும் விவாதத்தில் நான் அமைதியாக இருப்பது என்பது எனது பலவீனமோ அல்லது குற்ற உணர்வின் அடையாளமோ அல்ல.

இந்த விஷயத்தில் நான் கண்ணியமாக இருக்க முடிவு செய்துள்ளேன். உண்மையை மூடி மறைத்து என் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. ஆனால், சட்டம் நீதியை நிலைநாட்டும் என்று உறுதியாக நம்புகிறேன்.

விவகாரத்து தொடர்பான எனது முந்தைய அறிக்கையை சிலர் தவறாக புரிந்துகொண்டது வருத்தமளிக்கிறது. இந்த விவகாரத்தில் தனிப்பட்ட உரையாடல்களுக்காக நான் இன்று வரை காத்திருக்கிறேன். ஆனால், அது மறுக்கப்படுகிறது.

திருமணத்தின் புனிதத்தை நான் ஆழமாக மதிக்கிறேன். யாருடைய நற்பெயரையும் புண்படுத்தும் வகையில் பொதுவிவாதங்களில் ஈடுபட மாட்டேன். குடும்பத்தின் நலனில் நான் கவனம் செலுத்துகிறேன். மேலும், கடவுளின் வழிகாட்டுதலை நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்… ‘வேட்டையன்’ டிரைலர் ரிலீஸ் எப்போது?

வீரபாண்டியாரின் வளர்ப்பு… ஸ்டாலின் தோழன்… இப்போது அமைச்சர்- யார் இந்த வக்கீல் ராஜேந்திரன்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share