ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற பாலிவுட் நடிகர் அமீர் கான், இனி மீண்டும் திருமணம் செய்ய வாய்ப்பில்லை என சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களில் மிக முக்கியமானவர் பாலிவுட் நடிகர் அமீர் கான். சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுப்பதிலும், உலக அளவில் இந்திய சினிமாவை பிரதிபலிக்கும் முயற்சிகளையும் பாலிவுட்டில் மேற்கொண்டவர் அமீர் கான். இந்த நிலையில், சமீபத்தில் நடிகை ரியா சக்ரபோர்ட்டியின் பாட்காஸ்ட் பேட்டியில் திருமணம் குறித்த தனது பார்வை குறித்து பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர், ” நான் ஏற்கனவே இரண்டு முறை விவாகரத்து பெற்றவன். என்னிடம் திருமணத்தை பற்றி எந்தவித ஆலோசனையும் கேட்க வேண்டாம்” என ஜோக் அடித்தார்.
மேலும், “எனக்கு தனியாக இருக்க விருப்பமில்லை. எனக்கு ஒரு துணை வேண்டும். நான் விவாகரத்து செய்த இரு முன்னாள் மனைவிகளுடன் தற்போது வரை நல்ல உறவு முறையில் தான் உள்ளேன். நாங்கள் ஒரு குடும்பம் போல் இன்னும் நீடிக்கிறோம். வாழ்க்கை தீர்மானிக்க முடியாதது. எல்லோருக்கும் திருமண வாழ்க்கை ஒத்துப் போவதில்லை” என்றார்.
மீண்டும் திருமணம் செய்து கொள்வீர்களா? என நடிகை ரியா கேட்ட கேள்விக்கு “எனக்கு தற்போது 59 வயது ஆகிவிட்டது. எப்படி மீண்டும் திருமணம் செய்துகொள்ள முடியும். அது மிகக் கடினம். நான் என் குழந்தை, குடும்பம் என சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். இன்னும் சிறந்த மனிதனாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்” என்றார்.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சத்ரபதி சிவாஜி சிலைக்கு மோடி கேரண்டி… அப்டேட் குமாரு
மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை… ஒரே ஆண்டுக்குள் சுக்குநூறானது!