லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் அமீர் கான் நடிக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தனக்கே உரித்தான கமர்ஷியல் ஆக்ஷன் படங்களை வழங்குவதில் வல்லவரான லோகேஷுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் வட்டாரத்தில் தனி ரசிகர் கூட்டம் உண்டு. தனது திரைவாழ்வைத் தொடங்கிய கொஞ்ச காலத்திலேயே அடுத்தடுத்து விஜய், கமல், ரஜினி என தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்துள்ளது.
தற்போது ரஜினி நடிக்கும் ‘கூலி ‘ திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கானை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல மொழிகளில் வெளியாகும் பான் இந்திய திரைப்படமாக இது இருக்கும் எனவும் பேசப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமீர் கான் நடிப்பில் கடைசியாக ‘ லால் சிங் சத்தா ‘ என்கிற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து இயக்குநர் ஆர்.எஸ் பிரசன்னா இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘ சித்தாரே சமின் பர் ‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்துள்ளது. இந்தத் திரைப்படம் 2018இல் வெளியான ஸ்பானிஷ் திரைப்படமான ‘ சாம்பியன் ‘ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும் .
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நீதிமன்றத்தில் ஆ.ராசா ஆஜர் : அமலாக்கத் துறைக்கு உத்தரவு!
முல்லை பெரியாறு அணை: பீதியை கிளப்பிய சுரேஷ் கோபி… செல்வப்பெருந்தகை கண்டனம்!