இந்த வாரம் வெள்ளிக்கிழமையான இன்று (ஜூலை 19) 6 படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளன.
வார இறுதி விடுமுறை நாட்களை குடும்பத்துடன் கொண்டாட ஓடிடிகளில் என்ன படம் வெளியாகிறது என்று சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இந்த வாரம் ஆடு ஜீவிதம், ரயில் உள்ளிட்ட 6 தமிழ் படங்கள் வெளியாகி உள்ளது.
நடிகர் பிரிதிவிராஜ் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் உலகம் முழுவதும் வெளியான படம் ஆடு ஜீவிதம். நடிகை அமலாபால் கதாநாயகியாக நடித்த இந்த படம் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட மலையாள நாவலான பென்யாமின் எழுதிய அடு ஜீவிதம் நாவலைக் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும்.
ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் இன்று தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியில் வெளியாகியுள்ளது.
நடிகர் நாசர், தலைவாசல் விஜய், ஜெயக்குமார் ஜானகிராமன், நடிகை ஸ்வயம் சித்தா ஆகியோர் நடிப்பில் கடந்த மே மாதம் திரையரங்கில் வெளியான டார்க் ஹாரர் திரைப்படமான அகாலி படம் ஆகா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் அஞ்சாமை. நடிகர் விதார்த் மற்றும் நடிகை வாணி போஜன் ஆகியோர் நடித்த இந்த படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. தற்போது சிம்ப்ளி சவுத் தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது.
வடமாநில தொழிலாளர்களின் வாழ்க்கை பற்றி, பாஸ்கர் சக்தி இயக்கத்தில் ரயில் திரைப்படம் வெளியானது. கடந்த ஜூன் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் இன்று டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
நடிகை விதார்த் காவல்துறை அதிகாரியாக நடித்த லாந்தர் திரைப்படம் இன்று சிம்ப்ளி சவுத் ஓடிடியில் வெளியானது.
அதுபோன்று ஆர்கே சுரேஷ் நடிப்பில் வெளியான காடுவெட்டி படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
அமுதா ஐ.ஏ.எஸ்.சுக்கு ஸ்டாலின் கொடுத்த ‘ஸ்பெஷல்’ அசைன்மென்ட்!
ப்ளூ ஸ்க்ரீன் எரர்… சென்னை டூ அமெரிக்கா வரை ஸ்தம்பித்த கணினி வேலைகள்!