'Aadu Jeevidam' collected awards! : But denied for AR Rahman...

விருதுகளை குவித்த ‘ஆடு ஜீவிதம்’! : ஆனால் ஏ.ஆர் ரகுமானுக்கு மட்டும்…

சினிமா

54 ஆவது கேரளா மாநில திரைப்பட விருதுகள் இன்று ( ஆக. 16 ) அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பிரித்விராஜ் நடித்த ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படத்திற்கு 8 சிறந்த பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள இயக்குநர் பிலஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் நடித்து சில மாதங்களுக்கு முன் வெளியான திரைப்படம் ‘ ஆடு ஜீவிதம் ‘ . இந்தத் திரைப்படம் மலையாளத்தில் மட்டும் இன்றி தமிழிலும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. போலி ஏஜண்ட்களின் கொடுமையால் துபாய் பாலைவனத்தில் சிக்கித் தவிக்கும் ஒரு இளைஞனின் கதையை அப்படியே எதார்த்தத்துடன் படமாக்கியிருந்தார் இயக்குநர் பிலஸ்ஸி. இந்தப் படம் வெளியான போதே இது பல்வேறு விருதுகளை வாங்கிக் குவிக்கும் என பல விமர்சகர்கள் பாராட்டி எழுதினர்.

அதன்படி, தற்போது 54 ஆவது கேரளா மாநில திரைப்பட விருதில் 8 சிறந்த பிரிவுகளின் கீழ் விருதுகளை குவித்துள்ளது ஆடு ஜீவிதம்’.

சிறந்த நடிகர் – பிரித்விராஜ்
சிறந்த இயக்குநர் – பிலஸ்ஸி
சிறந்த ஒளிப்பதிவாளர் – சுனில்
சிறந்த ஒலிப்பதிவு – ரசுள் பூக்குட்டி
சிறந்த ஒப்பனை – ரஞ்சித் அம்பாடி
சிறந்த நடிகர் ( நடுவர்கள் தேர்வு ) – நடிகர் கோகுல்

இந்த விருதைப் பெற்ற பின் பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குநர் பிலஸ்சி , ‘ இசைப் பிரிவில் ஏ.ஆர்.ரகுமானுக்கு விருது வழங்கப்படாதது வருத்தத்தை அளிக்கிறது ‘ எனத் தெரிவித்தார்.

– ஷா

70வது தேசிய திரைப்பட விருதுகள் – முழு பட்டியல் இதோ!

ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டமன்ற தேர்தல்கள் எப்போது?

+1
1
+1
0
+1
1
+1
4
+1
1
+1
0
+1
5